இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் யாழும் குழலும் நாதசுரம் யாவுள தண்ணுமை பேதமெலாம் வாழும் கருவிகள் வகை பலவும் வகுத்தது தமிழெனல் மிகையலவாம். கொல்லா விரதம் பொய்யாமை கூடிய அறமே மெய்யாகும் எல்லாப் புகழும் இவைநல்கும் என்றே தமிழன் புவி சொலலும். மானம் பெரிதென உயிர்விடுவான் மற்றவர்க் காகத் துயர்படுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான் 'தருவது மேல்' எனப் பேசிடுவான். ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் நீதியும் உரிமையும் அன்னியர்க்கும் நிறைகுறை யாமல் பண்ணினவன். உத்தமன் காந்தியின் அருமைகளை உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன் சத்தியப் போரில் கடனறிந்தான் சாந்தம் தவறா துடனிருந்தான். 11