________________
-: தமிழன் இதயம் : தமிழரின் பெருமை தமிழா ! உனக்கிது தருணம் வாய்த்தது தரணிக்கெல்லாம் வழிகாட்ட 'அமுதாம் என்மொழி அறமே என்வழி அன்பே உயிர்நிலை ' என்று சொல்லும் (தமிழா ! ) சைவமும் வைணவம் சமணமும் பவுத்தமும் தழைத்தது செழித்தது தமிழ் நாட்டில் வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள். (தமிழா !) எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமைகளை ஏத்திப் பணிந்தவர்கள் தமிழ்நாட்டார் இங்கே அங்கே என்று அறிவுகளை என்றும் பிரித்ததில்லை தமிழ் நாட்டார். (தமிழா!) ஏசு தமிழரல்ல என்றிடும் காரணத்தால் இகழ்ந்து விடுவதில்லை தமிழ் நாட்டார் பேசும் தமிழர்களில் கிரிஸ்துவைப் போற்றுகின்ற பெருமையுடையவர்கள் பலபேர்கள். (தமிழா!) ( மகம்மது பிறந்தது மற்றொரு தேசம் அவர் மகிமை விளங்குமிந்தத் தமிழ்நாட்டில் அகம்மகிழ்ந் தனுதினம் நாகூர் ஆண்டவனை ஆரார் தொழுகிறார் அறியாயோ. (தமிழா!) 124