உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் உலகின் மதங்களெல்லாம் ஒவ்வொரு காலத்திலே ஓடிப்புகுந்ததிந்தத் தமிழ்நாட்டில் கலகம் சிறிதுமின்றிக் கட்டியணைத் தவற்றைக் காத்து வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார். (தமிழா!) தன்னுயிர் நீப்பினும் பிறர் கொலை அஞ்சிடும் தருமம் வளர்த்தவர்கள் தமிழ்நாட்டார் மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடல் மண்டிக் கிடப்பதுந்தன் தமிழ்மொழியே. (தமிழா!) கொல்லாவிரதமே நல்லார் வழியென்று கூறி நடந்ததுந்தன் குலத்து முன்னோர் எல்லா விதத்திலும் எவரும் மதிக்கத்தகும் ஏற்றமுடையதுந்தன் இல்லறமாம் (தமிழா!) உலகம் முழுவதிலும் கலகம் உறுமுதுபார் உன்பெருங் கடமைகள் பலவுண்டு விலகும்படிக்குச் செய்யும் வெறிகொண்ட பேச்சையெல்லாம் விலக்க விழித்தெழுவாய் தமிழ்மகனே ! (தமிழா !) இந்தியத் தாயின்மனம் நொந்து கிடக்கையிலே இனமுறை பேசுகின்றார்! இழிவாகும் அந்தப் பெரியவளின் அடிமை விலங்கறுத்துன் அன்பை நிலை நிறுத்து அகிலமெல்லாம். (தமிழா!) தமிழகம் வாழ்கநல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத் தாங்கிடும் இந்தியத்தாய் தவம்பலிக்க குமிழும் நுரையுமென்னக் கூடி மனிதரெல்லாம். கொஞ்சிக் குலவிடுவோம் குவலயத்தில். (தமிழா!) 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/126&oldid=1449907" இலிருந்து மீள்விக்கப்பட்டது