இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
-: தமிழன் இதயம் :சாந்திதரும் கொடி கற்புடைப் பெண்கட் கெல்லாம் கணவனே தெய்வ மென்பார் சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம் சொன்ன சொல் தெய்வ மென்பார் மற்பெரும் வீரர்க் கெல்லாம் மானமே தெய்வமாகும் நற்பெயர் நாட்டிற் காக்கும் நமக்கிந்தக் கொடியே தெய்வம். அன்னியக் கொடிக ளெல்லாம் அரசியல் ஒன்றே பேசி பொன்னியல் போக வாழ்வின் பொது நலம் தனையே கோரும் என்னுடைப் பரத நாட்டின் இக்கொடி இந்த வாழ்வின் பின்னையும் அறிவு தேடும் பேரின்பம் தனையும் பேசும். பிறநாட்டுக் கொடிக ளெல்லாம் பிறநாட்டைப் பிடிக்க எண்ணி மறம் நாட்டி மக்கள் தம்மைச் சண்டையில் மடியச் செய்யும், 126