உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் யாராலே ? சூரியன் வருவது யாராலே? சந்திரன் திரிவது எவராலே? காரிருள் வானில் மின்மினிபோல் கண்ணிற்படுவன அவை என்ன? பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பெய்வது எவராலே? ஆரி தற் கெல்லாம் அதிகாரி? அதை நாம் எண்ணிட வேண்டாமோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி தரையில் முளைத்திடும் புல் ஏது? மண்ணிற் போட்டது விதையொன்று மரம் செடி யாவது யாராலே? கண்ணில் தெரியாச் சிசுவையெல்லாம் கருவில் வளர்ப்பது யார்வேலை? எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம் ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ! எத்தனை மிருகம்! எத்தனை மீன்! எத்தனை ஊர்வன பறப்பன பார்! எத்தனைப் பூச்சிகள் புழுவகைகள்! எண்ணத் தொலையாச் செடிகொடிகள்! 12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/13&oldid=1448505" இலிருந்து மீள்விக்கப்பட்டது