இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் நடுவில் ராட்டை யொன்று பார்ப்போம் - அதில் நலிந்த பேர்க்குக் கஞ்சி வார்ப்போம் வடுவிலாத தொழில் நூற்றல் - குடிசை வாழும் ஏழைக்கென்று சாற்றல். (கொடி) பக்தி, சத்தியம், தியாகம் - இவற்றின் பண்பே வாழ்க்கையின் யூகம் நித்தம் நித்தமிந்த நீதி - தம்மை நீட்டும் இக்கொடியின் ஜோதி, (கொடி) ஜாதிபேத மதில் இல்லை-மற்றும் சமய பேதமதில் இல்லை நீதி யானபல முறைகள் - தமக்கு நிலைய மாகும் அதன் குறிகள். (கொடி) என்ன புதுமையிது பாரும் கொடி ஏதிது போலொன்று கூறும் அன்னைக் கொடியிதனைப் பாடி-அதன் அடியில் நின்றுபுகழ் கூடி. (கொடி) ஏழை எளியவர்கள் யார்க்கும் பயம் இல்லை யென்ன அறம் காக்கும் வாழி நமது கொடி வாழி-புது வாழ்வு தந்தினிது ஊழி. (கொடி) 131