உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழன் இதயம்

நெஞ்சொடு இரங்கல்

பல்லவி

ஒருநாளைக் கொருதரம்
ஒருநொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
எண்ணிச் சுகித்ததுண்டோ? - மனமே!

சரணம்


திருநாளும் தேரும் என்று தேடியலைந்த்ததல்ல
சிந்தனை அலையாமல் த்யானத்தில் நிறுத்தியே ( ஒரு)


அனுபல்லவி



விடியுமுன் விழித்தனை
வெளுக்குமுன் வீட்டைவிட்டாய்
வெவ்வேறு இடத்துக்கு
வௌவால்போல் ஓட்டமிட்டாய்
உடலும் மனமும் சோர்ந்து
ஓய்ந்திட வீடுவந்தும்
உண்ணும் பொழுதுங்கூட
எண்ணம் நிலைப்பதில்லை. ( ஒரு)

அரைக்காசுக் கானாலும்
ஒருநாள் முழுதுங்காப்பாய்
ஆயிரம் பேரையேனும்
அலுப்பின்றிப் போய்ப் பார்ப்பாய்


14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/15&oldid=1448524" இலிருந்து மீள்விக்கப்பட்டது