உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் :

திருமுடி சூட்டிடுவோம் பல்லவி திருமுடி சூட்டிடுவோம் - தெய்வத்தமிழ்மொழிக்கு (திரு) அனுபல்லவி வருமொழி எவருக்கும் வாரிக்கொடுத்துதவி வண்மைமிகுந்த தமிழ் உண்மை உலகறிய (திரு) சரணங்கள் பெற்றவளை இகழ்ந்து மற்றவரைத் தொழுத பேதமை செய்துவிட்டோம் ஆதலினால் நம் அன்னை உற்ற அரசிழந்து உரிமை பெருமை குன்றி உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு) அன்னையை மீட்டும் அவள் அரியணை மீதிருத்தி அகிலம் முழுதும் அவள் மகிமை விளங்கச்செய்வோம் முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே (திரு) தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு தாரணி தன்னில் நம்மை யாரினிமேல் இகழ்வார் நோயும் நொடியும் விட்டு நுண்ணறி வோடு நல்ல நூலும்கலைகளெல்லாம் மேலும் மேலும் வளர்ப்போம்.(திரு) 161

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/162&oldid=1449915" இலிருந்து மீள்விக்கப்பட்டது