________________
: தமிழன் இதயம் :
சக்தி தோத்திரம்
பல்லவி
சக்தி எனக்கே அருள்வாய்--பரா
சக்தியென் தாயுனை நித்தமும் தொழுதனன் (சக்தி)
சரணம்
பக்தியொடுந்தனைப் பணிந்திடல் மறந்தேன்
பாரினிற் சுகமெல்லாம் நீயெனெத் தெரிந்தேன்
இத்தின முதலுந்தன் இணையடி புரிந்தேன்
இனிமேற் பிணியில்லை கவலைகள் துறந்தேன். (சக்தி)
நோய்களைத் தடுத்திட நுண்ணிய அறிவும்
நொந்தவர் தங்களைக் காத்திடப் பரிவும்
மாய்வதைக் குறைத்திட மருந்துகள் முறிவும்
மந்திர தந்திர மணியவை தெரியும். (சக்தி )
கல்லினுங் கட்டுடைய தேகம் எனக்கருள்வாய்
காலனை ஜெயித்திடும் கருணையும் தருவாய்
சொல்லிலும் செயலிலும் தூய்மையைத் தருவாய்
சோம்பலை யோட்டிநற் சுகமெனக் கருள்வாய் (சக்தி)
புண்ணிய பாபமெந்தன் இச்சையிற் கடந்து
பூதங்கள் ஐந்துமென் சொற்படி நடந்து
எண்ணிய யாவுமெந்தன் இஷ்டப்படி முடிய
ஈன்றவளே உந்தன் அருள்வரத் தடையோ. (சக்தி)
16