உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : கர்ப்பிணிக்குப் பூ முடித்தல் கல்லினுட்சிறு தேரையோடு கருவிலேவளர் யாவையும் எல்லையில் பல ஜீவகோடி யை எங்குமாய்நின்று காத்திடும் வல்லவெம்பெரு மானருளினால் வஞ்சியேபிள்ளை யாண்டனை நல்ல பூமுகை சூட்டுவோமந்த நாதனுந்தனைக் காக்கவே. மல்லிகை நல்ல முல்லையாதிய வெள்ளையாமலர் சூட்டுவோம் சொல்லுமன்னவை வெண்மை போல நீ சுத்தமாயிரு நித்தமும் பல்லுமுந்தன்ப டுக்கையோடின்னும் பாவையே உந்தன் யாவையும் நல்லவெள்ளை யெனச்சொல்லும்படி நாளும் வைத்திடவேண்டியே வாடினாலும் வதங்கினாலும் தம் வாடைவீசுதல் வாடிடா நாடியே மரு காமருக்கொழுந் தோடுநன்மகிழ் சூட்டுவோம் பாடுமிகப் பட்டபோதிலும் பக்தியோடிரு நித்தமும் தேடியே உன்னைத் தேவன் வந்தருள் செய்குவான் பயமில்லையே 165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/170&oldid=1449919" இலிருந்து மீள்விக்கப்பட்டது