உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : முருகன் பாட்டு முருகனென்ற சிறுவன்வந்து முணுமுணுத்த சொல்லினால் முன்னிருந்த எண்ணம்யாவும் பின்னமுற்றுப் போனதே அருகுவந்து மனமுவந்து அவனுரைத்த ஒன்றினால் அடிமையென் மனத்திருந்த அச்சமற்றுப் போனதே இளமையந்த முருகன் வந்து என்னொடொன்று சொல்லவே என்னுளத் திருந்த பந்தம் ஏதுமற்றுப் போனதே வளமையுற்று இளமைபெற்று வலிமிகுந்த தென்னவே வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சையென்ற ஞானமே அழகனந்த முருகன் வந்தென் அருகிருந்த போதிலே ஐம்புலன்களுக்கொடுங்கி அஞ்சியஞ்சி அஞ்சி நான் 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/18&oldid=1448510" இலிருந்து மீள்விக்கப்பட்டது