உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவயவவவவவவவவவவவவவல ஸ்ரீ பொ. திருகூடசுந்தரம். பிள்ளை எம். ஏ. பி. எல். சவப் சவப்ப சென்ற 30 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டின் உயர்வுக் காகத் தன் நேரம் பூராவையும் ஈடுபடுத்தி தேச சேவை செய்துவரும் ஒரு சிலரில் ஸ்ரீ திருகூடசுந்தரம் பிள்ளை அவர்களும் ஒருவர். காந்தியடிகளின் ஒத் துழையாமை இயக்கத்திற்கு முன்னரே வக்கீல் தொழிலை உதறி எறிந்துவிட்டு காந்தீய இயக்கத்தில் சேர்ந்தவர். இன்றுவரை சலியாமல் அவரும் அவரது மனைவி மக்கள் அனைவரும் சுதந்திர யுத்தத்தில் ஈடு பட்டு நிற்கிறார்கள். காந்திஜியின் நிர்மாணத் திட்டத் தில் தாய் மொழிக்குப் பிரதானம் உண்டு. இயற்கை யிலே தமிழ் ஆர்வமுடைய ஸ்ரீ பிள்ளை அவர்கள் அனேகம் நூல்கள் இயற்றி யிருக்கிறார்கள். சமீபத் பத்தில் அவரது நூல்கள் பண்ணை மலர்களாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. தேசீய நலனே பிரதான மாகக் கருதும் இலக்கியத்திலேயே ஜீவசக்தி இருக்கு மென்பதற்கு ஸ்ரீ திருகூடசுந்தரம் பிள்ளை அவர் களின் நூல்களே அத்தாட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/180&oldid=1449902" இலிருந்து மீள்விக்கப்பட்டது