இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
________________
தமிழன் இதயம்
முருகன்மேற் காதல்
முருகனென்ற பெயர் சொன்னால்-தோழீ!
உருகு தெந்தனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர-மனம்
பித்துகொள்ளுது உள் ளூர (முரு)
கந்தனென்று சொலும் முன்னே - என்
சிந்தை துள்ளுவது என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி - வாய்
ஊமை யாகுதுளம் குளிர (முரு)
வேலனென்ற பெயர் கேட்டு-ரனோ
வேர்வை கொட்டுது தன் பாட்டில்
காலனென்ற பயம் ஓடி-புது
களி சிறக்குதடி சேடி. (முரு)
குமரனென்ற ஒரு சத்தம் கேட்டு
குளிர வந்ததடி சித்தம்
அமர வாழ்வு பெறல் ஆனேன்-இனி
அடிமை யார்க்குமிலை நானே. (முரு)
குகனெனச் சொல்வதற் குள்ளே-நான்
அகம் மறந்தேன் அது கள்ளோ !
தகதகவென் றொரு காட்சி-உடனே
தண்ணெனமுன் வரல் ஆச்சு. (முரு)
19