பக்கம்:தமிழன் இதயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

                            தமிழன் இதயம்

ஆடும் மயிலில் வரக்கண்டேன்-சொல்ல
அழகு அதைவிட ஒன்றுண்டோ
வீடு வாசல் பொருள் எல்லாம்-துச்சம்
விட்டு மறந்த னடி நல்லாள்
(முரு)


பச்சைக் குழந்தையவன் மேலே-எந்தன்
பற்று மிகுந்த தெதனாலே?
இச்சை யாரமிகத் தழுவி-நானும்
இணங்கி யிருந்தனின்பம் முழுகி
(முரு)


கள்ளங் கபடமற்ற பாலன்-மேலே
காதல் கொண்ட என்னை ஞாலம்
எள்ளி ஏளனம் செய்தாலும் - நான்
எதற்கும் அஞ்சிலன் எக்காலும்

(முரு)
முருகன் கந்தன் வடிவேலன்-ஞான
திருகுகன் குமரன் சீலன்
சிறு குழந்தை யானாலும் - அவனைத்
திருமணம் புரிவன் மேலும்
(முரு)


வேறு பெயரைச் சொன்னாலும்-சற்றும்
விரும்ப மாட்டெனெந்த நாளும்
தூறு பேசுவதை விட்டு - எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட
(முரு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/21&oldid=1448795" இலிருந்து மீள்விக்கப்பட்டது