இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
- தமிழன் இதயம் : பெரியோர்
மடங்கிய பயிர்க ளெல்லாம் மழைவர நிமிர்ந்து நீளும் மருண்டிடும் குழந்தை பெற்ற மாதினைக் கண்டு தேறும் ஒடுங்கிய தேகம் தக்க உணவினால் உறுதி கொள்ளும் ஒளிந்திடும் காகம் நல்ல ஓசையால் வெளிவந் தாடும் அடங்கி இத் தேகந் தன்னில் அவித்தையில் அழுந்தும் ஆன்மா அன்பின் நல் லுருவ மாய அறிஞரைக் கண்ட போது முடங்கிய மயக்கம் நீங்கி முன்னைய உணர்ச்சி ஓங்க மொய்ச்சுடர்க் கொழுந்து போல முடுகிடும் மேலே யன்றோ . அருமறையும் பலகலையும் உலகுக் கீந்து அறுசமயப் பலவழியை அடக்கி யாண்டு உரிமையுடன் பிறநாட்டார் உவந்து போற்ற ஊழிதொறும் புதிதாகும் உயர்வு தாங்கும் பெருமைநமைப் பெற்றெடுத்த இந்த நாடு பெற்றதென நாமடைந்த பெரிய பேறு மருளகற்றி அருள் சுரக்கும் ஞானந் தோன்றி மனத்துறவு பூண்டவர்கள் மகிமையேயாம். 22