உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- : தமிழன் இதயம் :இராமகிருஷ்ண தேவர் முன்னையோர் நமது நாட்டின் முனிவரர் தேடி வைத்த முழுமுதல் ஞான மெல்லாம் மூடநம்பிக்கை யென்றும், பொன்னையே தெய்வ மென்றும், போகமே வாழ்க்கை யென்றும், மனிதரைக் கொன்று வீழ்த்தும் போரையே வீர மென்றும் தன்னையே பெரிதா யெண்ணித் தனக்குமேல் இருக்கும் வேறோர் சக்தியின் நினைப்பே யின்றித் தருக்கியே பிறப்பின் மாண்பைத் தின்னுமோர் மயக்கம் நீங்கித் தெளிந்திட எழுந்தஞானத் தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. மனிதரின் பாவம் போக்க மகிழ்ச்சியோ டுயிரைத்தந்த மாபெரும் த்யாக மூர்த்தி ஏசுவின் அன்பாம் நெய்யை, தனிவரும் துறவி யென்று தரணியோர் யாரும் போற்றும் சாந்தனாம் புத்த தேவன் தவமெனும் தட்டில் ஊற்றி, 23 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/24&oldid=1448491" இலிருந்து மீள்விக்கப்பட்டது