________________
தமிழன் இதயம் உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி விலை மதிக்க முடியாத செலவ மன்றோ வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும். புத்தர் பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும் போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும் கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில் களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும் சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும் உத்தமரைக் கண்டோமா' என்னும் ஏக்கம் ஒவ்வொருநாள் நமக்கெல்லாம் உதிப்ப துண்டே. 'குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும் கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும் ரத்தம்வரத் தடியடியால் ரணமுண் டாக்கி நாற்புறமும் பலர் உதைத்து நலியத் திட்ட அத்தனையும் நான்பொறுத்து அஹிம்சை காத்து அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும் உயிர் துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை. என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால் எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகு மன்றோ நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில் நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ