இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
-: தமிழன் இதயம் : காந்தியடிகளின் பெருமை இந்திய நாடு சுதந்தர மெய்தநல் தந்திரம் தந்தது யார்?--சிறு கந்தை ‘பக்கீ' ரென்று தந்தொருவன் சொன்ன காந்தி யென்னும் பெரியார் அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந்துணிந்திட ஆண்மை எழுப்பினதார்?--ஒரு வஞ்ச மில்லாதவர் வாய்மையின் தூய்மையின் வாழ்க்கையர் காந்தியவர். ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும் அன்பைப் பெருக்கினதார் ?-சற்றும் சாயுதல் செய்திடாச் சத்தியமூர்த்தி நம் தவமுனி காந்தியவர். நாட்டினிக்காயுயிர் கேட்பினும் தந்திட நானென்று முன்வருவோர்- பலர் போட்டியிட்டே வர வீரம் புகுத்தினர் புண்ணியர் காந்தியவர். அடிபட்டு மாளவும் சிறைப்பட்டு வாழவும் அச்ச மகற்றினதார்?- உண்மை குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீக்கிய குணமுயர் காந்தியவர். 33