உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் பேதையரென்று நாம் பேசிய பெண்களும் வீதியில் நம்மிலுமே - இந்த நீதியில்லா முறை அரசை எதிர்த்துடன் நின்றிடக் காந்தி செய்தார். சின்னஞ்சிறிய குழந்தைகளும் இன்று ஜய ஜய வென்று சொல்லி - எங்கும் கல்நெஞ்சுருகிடத் தேசத்தினைத்தொழ காந்திஜி செய்துவிட்டார். தீண்டப்படாதென்று மனிதரைச் சொல்வது தீமையில் தீமையென்றே-அதைப் பூண்டொடும் போக்க நாம் விரதம்புனைந்தது புண்ணியர் காந்தியினால். தன்னை வதைப்பவர் தங்களுக்கும் அன்பைத் தாங்குவதே தவமாம் - என்று முன்னை இந்நாட்டினில் சொன்னவர் சொற்களை முற்று வித்தார் காந்தி. உடலினும் உயிரினும் உள்ளிருக்கும் ஒன்று உயர்ந்தது காணும் என்றே - இந்தக் கடலுலகத்தினில் கண்ணுக்கு முன்னாக காட்டி விட்டார் காந்தி. காந்தியெனும் பெயர் சாந்தம் எனும் சொல்லின் காட்சியின் சாட்சியென்றே-இனி மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி மங்களம் எய்திடுவார். 3+

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/35&oldid=1449372" இலிருந்து மீள்விக்கப்பட்டது