இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும் வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால் அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியில்லை ஆண்மையும் அன்பும் அருளுமடா...... ஜீவர்கள் உலகுள யாவரும் சமமென செய்கையில் காட்டிய காந்தியடா பாவமும் பழிகளும் தீவினை வழிகளும் பதுங்குமடா கண்டு ஒதுங்குமடா ... எழுபதும் ஐந்தும் குமுகுழ வயசினில் என்னே! காந்தியின் இளமையடா! முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின் முத்தனடா பெரும் சித்தனடா... காந்தியின் தவக்கனல் சூழ்ந்தது உலகினைக் காம தகனமென எரிக்குதுபார் தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள் திக்குத் திசையெலாம் திகைத்திடவே... ஏழைகள் எளியரின் தோழன் அக் காந்தியை எப்படிப் புகழினும் போதாதே வாழிய அவன் பெயர் ஊழியின் காலமும் வையகம் முழுவதும் வாழ்ந்திடவே. 36