பக்கம்:தமிழன் இதயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் :

காந்தி வழி பழசா? சாந்தவழி சத்தியத்தில் சலித்தாய் நெஞ்சே! சன்மார்க்கப் பழக்கமில்லாச் சகவா சத்தால் காந்திவழி பழசாகப் போன தென்று கதிமாற மதிமாறிக் கருதுகின்றாய்; மாந்தருக்குள் காந்தியைப் போல் புதுமை வாழ்க்கை மற்றொருவர் நடத்தினதார் ? மனமே சொல்வாய் ஆய்ந்தறிந்த அவன் தொடர்பை இகழ்வாயானால் யாரும் இனி மீட்கவொண்ணா அடிமையே . ' பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப் போனாள் பிறிதொருதாய்வேண்டு மென்று பேசுவார்போல் நற்றவத்தால் நமக்கடுத்த தலைவன் காந்தி நானிலத்தின் உயிர்கட்கெல்லாம் தாயாம் நண்பன் கற்றகதை சரித்திரங்கள் காணாச் சுத்தன் கருணையென்ப தின்னதெனக் காட்டும் தீரன் உற்றதுணை காந்திவழி பழசாமென்றால் உய்வதற்கு வேறுகதி உண்டோ நெஞ்சே! ' சந்திரனும் சூரியனும் பழசாய்ப் போனார் சலித்துவிட்டோம் தினந்தினமும் அதையே பார்த்து, விந்தையுள்ள வேறிருவர் வேண்டுமென்று விரும்புவதை ஒக்குமன்றோ விளம்பாய் நெஞ்சே 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/38&oldid=1449375" இலிருந்து மீள்விக்கப்பட்டது