________________
தமிழன் இதயம் இந்தநிலம் இதுவரையில் அறிந்த உண்மை இதைவிடமேல் இல்லையென நடந்துகாட்டிச் சந்ததமும் மாறாத அறத்தைக் காக்கும் சாந்தனந்தக் காந்தியை நீ சலித்ததன்மை! 'நித்தம் ஒரு காற்றினையே மூச்சு வாங்கி நீர்நெருப்பு நிலம் வானில் புதிசுமின்றி மெத்தவும் நாம் சலித்துவிட்டோம்' என்டா யானால் மேதினியில் வேறுவழி உண்டோ நெஞ்சே! சத்தியஞ்சேர் சாந்தவழி அதையே நித்தம் சாதிப்பான் காந்தியென்று சலிப்பாயானால் பத்தியத்தைப் பாதியிலே முறித்தாற்போலப் பாடுபட்டும் பயனடையாப் பதரே ஆவாய். மாறுகின்ற சிறுபொருள்கள் மயக்கத்தாலே மாறாத உண்மைகளை மறந்தாய்நெஞ்சே கூறுபல மாச்சரியம் குறைய நம்முள் குற்றமற்ற சாந்தவழி வேண்டும் என்றே வேறுபல துன்பவழி எல்லாம் விட்டு வெகு புதிய காந்திவழி விரும்பிக் கொண்டாய் சேறுபட்ட உலக நடை மீட்டும் சேர்ந்து செய்த அருந் தவப்பயனைச் சிதறுகின்றாய். கலகமெல்லாம் கைகோத்துக் களிகூத்தாடக் கரடி புலி சிங்கமென மனிதர்சீற அலகைபற்றி ஆட்டுதல் போல் அகிலம் அஞ்ச அடிதடியும் கொலைகளவும் அறம்போல் ஓங்க 38