உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் உலகமெல்லாம் காந்தியையே உற்றுப் பார்த்து உய்வதற்கோர் புதியவழி உரைத்தானென்று பலகலையின் அறிஞரெல்லாம் புகழப் பார்த்தும் பரிகசித்தாய் நீ அவனைப் பாவி நெஞ்சே! அச்சமிக்க இருட்டறையில் அடைபட் டங்கே அழுவதற்கும் ஜீவனற்றுக் கிடந்த உன்னை மிச்சமுள்ள மூச்சுமற்றுப் போகு முன்னால் மீட்டணைத்து மேனிசெய்து விட்டான் காந்தி! இச்சகத்தில் அறிவறிந்தோர் என்றும் வாழ்த்தும் இன்பமிகும் காந்திவழி பழசா மென்றால் பச்சையிளங் காய்புதிய தென்று கொண்டு பழுத்தபழம் பழசென்னும் பான்மை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/40&oldid=1449377" இலிருந்து மீள்விக்கப்பட்டது