இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
-: தமிழன் இதயம் : காந்தீய சேவை சாந்தி சாந்தி சாந்தியென்று சங்கு கொண்டு ஊதுவோம் சோர்ந்தி ருக்கும் உலகினுக்குச் சுகமெடுத்து ஓதுவோம் மாந்தருக்குள் கோபதாப வாது சூது மாறவே காந்தி சொன்ன மார்க்கமின்றிக் கதி நமக்கு வேறிலை. மனித வாழ்வை மிருகமாக்கும் மமதையாவும் மாற்றுவோம் புனித மிக்கப் புதியவாழ்வு புவியில் மீளப் போற்றுவோம் இனிய ஞான சரிதமிக்க இந்தியாவின் மக்கள் நாம் கனதையிந்தச் சேவை செய்யத் தகுதியாவும் மிக்குளோம். வேக மான எந்திரங்கள் வேண வேண செய்யினும் போகவாழ்வு கோருகின்ற புதுமை யாவும் எய்தினும் 42