பக்கம்:தமிழன் இதயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் ஆகும் மற்ற வித்தைகற்று உலகை வென்று ஆட்டினும் நாக ரீகம் அல்ல வென்று நாம் நடந்து காட்டுவோம். கொன்று வீழ்த்தல் வீரமென்னும் கொச்சை யான கொள்கையை இன்று தொட்டு மாற்றிவிட்டு உண்மை வீரம் கொள்ளுவோம் தொன்று தொட்டுக் கருணை கற்ற பரத நாட்டில் தோன்றினோம் நன்று இந்தச் சேவைக்கேது வேறு நம்மைப் போன்றவர். தமிழ ருக்குக் கருணைஎண்ணம் தாயின் பாலில் தந்தது குமிழை யொத்த உயிரை நல்ல கொள்கைக் கீய முந்திடும் அமுத மொத்த காந்திமார்க்கம் தமிழ கத்தின் செல்வமாம் நமது சேவை அதனை ஏந்தி நாட்டி லெங்கும் சொல்வதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/44&oldid=1449895" இலிருந்து மீள்விக்கப்பட்டது