பக்கம்:தமிழன் இதயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் திலகர் (திலகர் இறந்த சேதியைக் கேட்டதினம் பாடியவை) இடியது விழுந்ததோ தான் இரும்பினைப்பழுக்கக்காய்ச்சி இரு செவி நுழைத்ததோ தான், தடியது கொண்டே எங்கள் தலையினில் அடித்ததோதான் தைரியம் பறந்ததோ தான் கொடியது சாய்ந்ததோதான் கொடுவிஷம் உச்சிக்கேறிக் குறைந்திடுங் கொள்கைதானோ, திடமுள தீரவீரன் திலகனார் மாண்டாரென்ற தீயசொற் கேட்டபோது! என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம்' என்னுமொரு மந்திரத்தை எங்கட்கிந்த மன்னவனே திலகமுனி மஹாராஜாஎம்முடைய மராட்டியர் தம் மடங்கலேறே! உன்னுடைய பெருஞ்சேனை யுத்தத்திலணிவகுத்து உத்தரவை எதிர்பார்த்து இன்னவழி போவதெனத் தெரியாமல் திகைக்கின்ற இச்சமயம் இறக்கலாமோ! அன்னியர்கள் தொட்டிழுக்க அவமானம்நேர்ந்ததென அழுது நின்றாள் அன்னையுந்தன் பாரதத்தாய் அவள் மானம் காப்பதற்கே அவதரித்தாய் ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/48&oldid=1449899" இலிருந்து மீள்விக்கப்பட்டது