________________
தமிழன் இதயம் சின்ன உந்தன் வயது முதல் இதுகாறும் அப்பிடியைத் தளர்த்துவிட்டாய் இன்னுமவள் சிறை நீங்கி வருவதற்குள் எம்மைவிட்டு ஏகினாயே ! பகையென நினைத்த பேரும் பக்தியோ டஞ்சி நிற்பார், மிகையெனச் சொல்லு வோரும் மெய்சிலிர்த் திடுவர் கண்டால் நகைமுகங் கண்ட போதும் நடுங்குவார் வெள்ளைக்காரர், தகையிவன் பிரிந்து போகத் தரிக்குமோ இந்த நாடு? வசைகூறி உனையிகழ்ந்த வாலண்டைன் சிர்ரலெனும் வகையிலோனை வழிகூற அவன்மேலே நீ தொடுத்த வழக்கிற்பல வஞ்சமாற்றி, அசைகூறி ஆங்கிலர்கள் அவன்பக்கம் தீர்ப்புச் சொன்ன அவதிநோக்கி, அங்கவர்கள் நீதிதனில் வைத்திருந்த நம்பிக்கை அறவே நீங்கி இசைகூற உலகமெலாம் இருந்தாளும் பெருங்கடவுள் இருமன்றத்தில் எடுத்துரைப்போம் இக்குறையும் இந்தியர்கள் பலகுறையும் என்று சொல்லி, பசை கூறித் தேவரிடம் பண்ணினையோ விண்ணப்பம் பரிவுகூறி பாங்குடனே அவர் விடுத்த ஓலைக்குப் பதிலுரைக்கப் போயினாயோ! 48