இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழன் இதயம் அரசியல் போராட்டத்தில் ஆழ்ந்திலன் என்றிட்டாலும் புரைசெயும் அடிமை வாழ்வின் புண்ணையே எண்ணி எண்ணி கரை செய முடிந்தி டாத கவலையால் கண்ணீர் பொங்க உரைசொலி அடிமைக் கட்டை உடைத்திடத் துடித்தோன் தாகூர். 'ஒத்துழை யாமை' என்று காந்தியார் உரைக்கும் முன்னால் இத்துரைத் தனத்தா ரோடு இணங்கிடப் பிணங்கி விட்டோன் பற்றுகள் அவர்முன் தந்த பட்டமும் பரிசும் வீசிச் சுத்தியை முதலிற் செய்த சுதந்தர தீரன் தாகூர். காந்தியும் ' குருதேவ்' என்று கைகுவித் திறைஞ்சும் தாகூர் மாந்தருள் பலநாட்டாரும் மதங்களும் மருவி வாழ்ந்து தேர்ந்த நல் லறிவை அன்பை செகமெலாம் பரப்ப வென்றே 'சாந்திநி கேதன்' என்ற சமரசச் சங்கம் தந்தோன். 59