உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் கலைகளின் வழியே தெய்வக் கருணையைக் காண்ப தென்னும் நிலையினைப் படிக்க வென்றும் நிருவிய நிலையம் ஈதாம் சிலைதரல் ஆடல் பாடல் சித்திரம் நடிப்ப ரங்கம் பலவித வித்தை எல்லாம் பயிலுதற் கிடமாய் நிற்கும். தாய்மொழிப் பற்றும் தங்கள் கலைகளைத் தாங்கி நிற்கும் ஆய்மையும் வங்காளிக்கு அதிகமாம் அதனால் எல்லாச் சீமையும் தாகூர் பாட்டைச் சிறப்புறப் பரப்பினார்கள் வாய்மையைத் தமிழர் போற்றி வளர்ப்பரோ தமிழின் மாண்பை. 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/61&oldid=1449911" இலிருந்து மீள்விக்கப்பட்டது