உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் : கவி தேசிக விநாயகம் பிள்ளை தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை ஆசிய ஜோதியெனும் புத்தர்போ தம் அழகு தமிழில் சொன்னான் அதுபோதும். கோழி குலவிவரும் கிளிகொஞ்சும் குழந்தை எழுந்து துள்ளிக் களிமிஞ்சும் ஏழை எளியவர்கள் யாவருக்கும் இன்பம் கொடுக்க அவன் பாவிருக்கும். உழுது தொழில்புரியும் பாட்டாளி உழைப்பில் ஓய்வு தரும் பாட்டாகும் தொழுது அடிமைப்படும் துயரமெல்லாம் தூரத் தள்ள மனம் உயருமடா. படித்துப் பழகாத பாமரருக்கும் பாடிப் பருக அதில் சேம மிருக்கும் ஒடித்துப் பொருள் பிரிக்கும் சந்திகளில்லை ; ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமல்ல. காடும் மலையும் அதில் கலைபேசும், கடலும் ஞானம்தர அலைவீசும் ; பாடும் தேசிகவி நாயகத்தின் பழமை பாடிட என் நா உவக்கும், நோய்நொடி யாவையும் விட்டோடி நூறு வயதும்சுகக் கட்டோடு தாய்மொழி வளர்ந்தவன் கவிகாணும் தனிவரம் தெய்வம் தரவேணும். 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/62&oldid=1449913" இலிருந்து மீள்விக்கப்பட்டது