பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

என்றுரைக்கும் திருக்குறளும். இவ்வாறு வீட்டு வாழ்க்கையில் அன்பின் கயிற்றால் மகளிர் பிணித்து விடுவதை வேற்றாரும் மாற்றாரும் காணுங்கால் அடிமைப்படுத்துவது போன்றே தோன்றும் போலும்! இக்கருத்தைக் குறுந்தொகையிலே மனைவியின் மாற்றாளான பரத்தையின் கூற்றில் வைத்துக் கூறி மகிழ்வர் ஓர் ஆண்பாற் புலவர். (கணவன் தன் மனைவியிடத்து)

கையும் காலுந் துளக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்.”

- குது. 8

எனக் குறிக்கும் அவ்வடிகள் குறிப்பாக வீட்டு வாழ்க்கையில் எவ்வாறாயினும் சிறப்பாக நாட்டு வாழ்க்கையாம் வெளி வாழ்வில் மனையுறை மகளிாது ஏவலுக்குட்பட்டு வினையாண்மையை ஆடவர் இழத்தல் கூடாது என்று எச்சரிக்கை விடுப்பர். 'பெண்வழிச் சேறல்' என்ற அதிகாரத்தில் வள்ளுவனாரும். அதனாலன்றோ அவ்வதிகாரமும் இல்லறவியலன்றி பொருட்பாலில் வைக்கப்பெற்றது! இவ்வறவுரையை ஆடவரேயன்றி மகளிரும் நன்குணர்ந்திருந்தனர். இதனைத் தலைவி மறந்தாலும் துணையாய தோழி நினைவுறுத்துவாள்.

'"வினையே ஆடவர்க்குயிரே
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்குரைத் தோருந்தாமே”

- குறு. 185

என்னும் அறவுரை ஒரு பெண்ணின் கூற்றுத்தானே! மக்கட் பேணல் நம் நாட்டில் இன்று போல் என்றுமே செல்வப் பெருமையும் இல்லா வறுமையும் ஒருங்கேயிருந்தன.