பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கல்லாக் காளை யெனுந் தொடர் அக்காலத்திற்கேற்ப வெற்றி வீரங்கல்லாத காளையெனப் பொருள் பெறினும் இக்காலத்திற் கேற்பப் பல வாய்ப்புக்களைப் பெற்றுங் கல்வி பயிலாக் காளையென்றும் - கல்வியில்லையென்றாலும் அறிவு ஒழுக்கம் கல்லாக் காளையென்றும் பொருள் படுமன்றோ இன்றும் தாயுள்ளத்தில் இவ்வுணர்ச்சி யெழுமேல் எப்படித் திருந்திவிடும் இளைஞருலகம்!

விருந்தோம்பல்

கண்ணைக் கவரும் வண்ணப் பலகையாலும், மூக்கையிர்த்து நாக்கூறச் செய்யும் நறுமணத்தாலும், காதைத் துளைக்கும் கானப் பாட்டாலும் ஊர்க்குள் நுழைவோரை வாவென்றழைக்கும் உண்டுறை உணவு விடுதிகள் இல்லாக் காலத்தே, வாணிபம் பற்றியோ வேறு வினைபற்றியோ வீடுதேடி வரும் விருந்தினர்க்கு (அக்காரணம்பற்றியே அக்காலத்தில் 'விருந்து' என்ற சொல் “புதுமை' எனப் பொருள் பட்டது) வயிறார உணவளித்து, உடலார உறைவிடங் கொடுத்து, உள்ளங்குளிர, புன்முறுவல் பூத்த இன்முகங் காட்டி, இனியவை கூறி விருந்தோம்பல், வீடுதோறும் இல்லறத்தாரின் இன்றியமையாக் கடமையாய் இலக்கிற்று. வறுமையில் வாடியோருங்கூடக் குப்பைக் கீரை கொய்து உப்பில்லாமல் அட்டேனும் விருந்தோம்பினர் எனப் பழம் பாடல்கள் கூறும். மாதரியின் விருந்தோம்பல் மாட்சியைச் சிலப்பதிகாரத்திற் காணலாம். வீடுதோறும் கீரையும், காய்கறிச் செடி கொடிகளும் இருந்தன வென்பதை,

“...சிற்றி லாங்கண்

பிரை நறிய கரையிவர் மருங்கின்" -
புறம், 116

என்னும் அடிகளால் அறியலாம்.