பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கூத்தாடுவர் என்றும் அறிகின்றோம். செல்வப் பெண்டிரும் மாலை நேரத்திலும், நிலவுக் காலத்தும், காற்றினையும், முழுநிலவினையும் துய்க்க நிலா முற்றங்களிலிருந்து மகிழ்வர்.

இறைவழிபாடு: இவ்வாறு இயற்கையோடு வாழ்ந்த மகளிர் இயற்கையின் உருவாய இறைவனையும் பலவகையால் தொழுதனர்; சிவன், திருமால், குமரவேள், புத்தர் ஆலயங்கட்குச் சென்று வழிபட்டனர். வீட்டிலும் மகளிர் மாலையில் மல்லிகை மலர்ந்ததும் பொழுதறிந்து விளக்கேற்றி, இருள் போக்கி ஒளிதரும் விளக்கினையே நெல்லும் மலருந்து வி வழிபட்டனரென நெடுநல்வாடை கூறும்.

நாட்டு வாழ்க்கை: இவ்வாறு வாழ்க்கையை விளக்கும் மகளிருட் சிலர் நாட்டின் நலத்திலும் நாட்டங்கொண்டு வெளி வாழ்க்கையிலும் வெற்றி கண்டனர்.

அறிவும் ஆற்றலும் நாடுவிட்டு நாடு சென்று நயம்படத் தூதுரைத்தனள் ஒளவை மூதாட்டி, வழக்கறிஞர் துணை நாடாது, மன்னனின் மாபெரும் மன்றத்திலும் தானாகவே தன் வழக்கைத் திறம்படக் கூறிய கண்ணகியின் சொல்வன்மை போற்றற்குரியது. கரிகாற்சோழனும் பெருஞ் சேரலாதனும் வெண்ணிப் போரிற் பொருதபோது வளவன் எய்த வாளி, சேரனது மார்பு வழிச் சென்று, புறத்திலும் புண் செய்துவிட அம்முதுகுப் புண், இழுக்குக்குரிய புறப்புண்ணன்றி விழுப்புண்ணேயெனினும் புறப்புண்ணாகவே கொண்டு நாணி, வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான் சேரன். அதே சமயத்தில் பலரும் போற்றிப் புகழ வளவன் தன் வெற்றியைக் கொண்டாடினான். வெற்றி, பகைவனின் பண்பையும் மறக்கச் செய்து வெறியாக மாறுவது உலகத்தியற்கை. அம்மாபெரும் வெற்றி முழக்கக் கூட்டத்திலே