பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

என்பது அப்பகுதி. அவள் அறிவும் ஒழுக்கமும் எங்கே கற்றாள்? பள்ளியிலும் கல்லூரியிலுமல்ல-வாழ்க்கைப் பள்ளியில்-தமிழகப் பண்பாட்டுப் பள்ளியில்-குடும்பக் கல்லூரியில் கற்ற அறிவுபெற்ற ஒழுக்கம். இத்தகைய பொது அறிவுடன் வாழ்க்கையை நடத்தினால்தான் ஆடவர்க்குக் கவலையும் இராது - அக்கவலையின் அறிகுறியாகிய நரையும் வராது. ஆடவரின் கவலைக்கு முதல் காரணம் அறிவற்ற மனைவியே என்று பொருள்படப் பாடினர் பிசிராந்தையார்.

'யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டனன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் அறிவால்

- புறம். 191

என்பது அப்பாட்டு.

துறவும் தொண்டும்: தன்னலங் கருதாது மக்கள் நலங் கருதி மக்கள் தொண்டாற்றிய மணிமேகலை துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு தனிவாழ்க்கை தானாகவே அமைந்துவிட்ட கன்னிப் பெண்களும் தயங்காது தொண்டாற்ற முன்வரலாம் என்பதைக் காட்டும் அவளது அரிய வாழ்வு"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என உணவுக் கொடை புரிந்தும், சிறைக் கோட்டமெலாம் அறக் கோட்டமாய் மாற அருங்கனவு கண்டும் பெருந் தொண்டாற்றிய மங்கை மணிமேகலை.

விரம் ஆடவரைப் போன்றே முது குடிமகளிர்க்கும், மறமாகிய விரவுணர்ச்சியுண்டு என்பதை,

“அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்
படவரல் மகளிர்க்கு மறம்மிகுத் தன்று”