பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

உயர்வு தாழ்வு முதலிய வேறு பாடுகளைக் கொள்ளாது, உள்ளத்தெழுந்த அன்பினால், எக்குடிப் பிறப்பினும் பாவரேயாயினும் கலந்து, களவு நெறி நின்று பின் கற்பு நெறி நிற்பர் என்பது விளங்குகின்றது. இதனை, “யாயும்யாயும் யாராகியரோ” எனத் தொடங்கும் குறுந்தொகைச் செய்யுளால் அறியலாம்.

கற்பென்பது கணவனும் மனைவியுமாய் மணம் புணர்ந்த மக்கள் தாம் மேற்கொண்ட இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் ஒழுக்கமாகும், கற்பென்பது கல்லென்னும் பகுதியில் தோன்றிக் கற்பித்தவாறு நடத்தல், கற்றபடி நடத்தல் என்னும் பொருள் தந்து நிற்கின்றது. பட்டறிவும் தெளிவுங்கொண்ட இரு முதுகுரவரும் சான்றோரும், “வையத்து வாழ்வாங்கு வாழ்க", “பெற்றோன்வெட்கும் பிணையை ஆகுக", "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வில”ளாய் வாழ்கவெனக் கற்பித்தவாறு வாழ்க்கையை நடத்தல் கற்பாகும். இதனையே, ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை' என்ற தொடரும் விளக்குகின்றது. இக் கற்பொழுக்கம், 'கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே எனத் தொல்காப்பியம் விளக்குகின்றது.

ஒருவனும் ஒருத்தியுமாய்க் களவில் ஒழுகிய தலைமக்கள் பலரறிய மணந்துகொண்டு ஒழுகும் ஒழுக்கம் கொள்ள வேண்டிய தென்ன? செம்புலப் பெயல்நீர் போல் அன்பிற் கூடி இன்பந்துய்த்து வாழ்வது இயல்பு, - அங்ங்னமே வாழ்ந்தும் வந்தார்கள். மனம் குரங்கெனப்படுதலின், கரிபொய்த்தலும், சூள்