பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

யுணர்வதற்கேற்ற வெளிப்படை விவரங்கள் கிடைத்தில. எனினும் ஒரு சில பாடல்கள் குறிப்பாகப் புகலுவதைத் துணைகொண்டு அறிவனவற்றைக் காண்போம்.

அக்காலத்து, இக்காலம் போன்று திருமணத்தை நடத்தி வைப்பதற்கெனத் தனிப்பட்ட ஒரு நடத்துபவன் (புரோகிதன்) இருந்ததாகத் தெரியவில்லை. பெற்றோரும் உற்றோரும், உடனிருந்து நடத்தி மகிழ்வதாகவே காண்கின்றோம்.

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ளுெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெரு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குதுத்தகர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர் பயந்த திதலையல் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வாழாஅ நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் கம்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி ஆகெனத் தமர்தர”