பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

நெடுங்காலத்தின் பின்னரே அவர்கள் குடியாட்சியைச் சிறுகச் சிறுகத் தேய்த்து முடிவேந்தர் கோலோச்சும் நிலை முதிர்ந்திருக்கும்.

சங்க நூல்களாலறியப்படும் வேளிர் முதலியோருடைய ஆட்சிக் கூறுகளைத் தமிழ்நாட்டுப் படத்திற்குறித்து நோக்கின் போக்குவரவுக்கு வசதியில்லாத மக்கள் நிலைத்துள்ள கோடி கொடங்குகளில் கி.பி. நான்காம் நூற்றாண்டுவரை இக்குடி யாட்சிகள் நிலைத்து வலுவொடு திகழ்ந்தமை பெறப்படும்.

எனவே தமிழர் சமூகம் முதலில் குடித் தலைவரது ஆட்சியுள் நின்று, பின்னர்க் குடித் தலைவர், முடியரசர் இவ்விருவராலும் ஆளப்பெற்றுக் காலப்போக்கில் வேத்தாட்சிக்குட்பட்டமையைக் காண்பதற்கு இதுவரை கூறியவை யிடந்தரலாம்.

2

ஆட்சிவகை இவ்வாறு மாறி வளர்ந்தமை போன்றே சாதிப் பிரிவுகளும் வளர்ச்சியுற்றிருக்கலாம்.

அகத்திணை மக்களாகப் பார்ப்பார், அரசர், வணிகர் வேளாளரிவர் குறிக்கப்பட்டிலர். எனினும், தொல்காப்பியத்திலே இவர்களைப் பற்றிய குறிப்புக்களுள்ளன.

வளைவு, சுற்று என்று தமிழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்கும் பெயர் தந்ததுள்ளனர். பெரிதாக வளைத்துக் கட்டப்பட்டு ஒரு குடியினர் வாழுமிடமே வளைவெனப்பட்டது போலும். ஒருவனைச் சுற்றிலும் வதியும் இயல்பினர் அவன் சுற்றமே போலும். இவ்வாறான தனிநிலை மாறிப் பொருள் தேடல், இடம் நாடல் முதலிய காரணங்களால் சமூகம் சார்நிலை பெற்றுப் பெருகிய