பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போது, சில தொழில்களிற் சில கூட்டங்கள் திறன் பெற்றோராய்த் தனிநிலை பெற்றிருப்பர்.

அந்நிலையிற் பழநூல்களிற் பாணன், பறையன், பொருநன், மறவன் என்ற தொழிற்றிறக் கூட்டங்களைக் காண்கிறோம். அவர் தம்முள்ளே கொள்வன கொடுப்பனவாய உறவால் தனிச் சாதியினராயினர். வடவாரியர் தொடர்பிற்றான் பார்ப்பனர் முதலிய பிரிவுகள் இங்கே கொள்ளப்பட்டிருக்க வேண்டும். சங்க நூல்களில் பார்ப்பனரைப்பற்றிய குறிப்புக்கள் அவர்கள் இந்நாட்டிற் குடியேறி இந்நாட்டுப் பழக்க வழக்க மரபுகளில் முழுத் தோய்வு பெறாதாராகவே காட்டுகின்றன.

'நால்வேத நெறி'யூபம் நட்டு வேள்வி செய்தல் முதலியன பிறர் கலப்பாற்றமிழர் சமூகமறிந்த போதும் மேற்கொண்டபோதுமே 'நால் வருண' வெண்ணமும் வளர்ந்திருக்கும். சங்கப் பழம் பாடல்களில் இந்நிலையிந் நாட்டில் நுழைந்தமை குறிக்கப் பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் நால் வருணங்களும் அவற்றுள் முதலது இரண்டாமது மூன்றாமது முதலிய தெளிவான குறிப்புக்களும் காண்கிறோம். எனவே, கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் நால் வருணப் பகுப்பு தெளிவான உருப் பெற்றுவிட்டது நம் நாட்டிலெனக் கொள்ளலாம்.

வலங்கையிடங்கைச் சாதிகள், அநுலோமர் பிரதிலோமர் பிரிவுகள் முதலியனவும் பத்தாம் நூற்றாண்டு முதலறியப் படுவனவாம். ஒரு கூற்றிலே யுறைந்த மக்கள் ஒரு சாதியினராயிருந்தது மாறிப் பலபட விரிந்து பல்வகை யுயர்வு தாழ்வுகளொடு சமூகங் காட்சியளிக்கத் தொடங்கிற்றுப்பத்தாம் நூற்றாண்டில்.