பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


பதினேழாம் நூற்றாண்டில் மதுரையில் மதம் தத்துவ மிவை பற்றிப்பத்தாயிரம் மாணவர்கள் பயின்று வந்தனராம். எல்லோரும் பிராமண்ர்களாம்.

எனவே, களப்பிரர் குழப்பத்துக்குப் பின் சமஸ்கிருதக் கல்வி தமிழ் நாட்டில் தழைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பல்லவரும் பாண்டியரும் சிறக்கச் செய்தனர். பதினெட்டாம் நூற்றாண்டுவரை யிந்நிலையில் பெருமாறுதலில்லை.

தத்தம் தொழிலைத் தங்குல வித்தையாகப் பயில்தல், விழா முதலிய சிறப்புக் காலங்களில் கற்றோர் எடுத்துரைப்பனவற்றைக் கேட்டு நல்லனவறிதல் என்ற நிலையில்தான் தமிழர் கல்வியிருந்தது.

தமிழ் நாட்டில் நெடுங்காலமாக வதிந்து தமிழ் நாட்டுக் குடிகளாகி விட்டவர் எவரெனினும் தமிழரே. அவர் தமிழர் சமூகத்துக்குப்புறம்பானவரல்லர். முன்பொரு காலத்தே பலப்பல காரணங்களால் ஆரியர், தெலுங்கர், கன்னடர், ஹிந்துஸ்தானிகள், மராத்தியர்கள் என்போர் இங்கே வதிந்தும் இங்கே வேர் கொள்ளாது தாமரையிலை மேற்றண்ணிர் போல இருந்திருக்கலாம். அக்காலமும் அந்நிலையும் மலையேறிவிட்டன. பழந்தமிழர், வந்து குடியேறியோர் கொள்கைகளை யொப்பித் தம்மைப் தாழ்த்திக்கொண்டு நின்றனர். தமிழ்நாட்டடரசரும் சமஸ்கிருதக் கல்விக்குத் தழைப்புநல்கி ஊரார் பிள்ளையை யூட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்றிருந்தனர். நல்லறிவு இந்தப் பொய்க் கோட்டைகளைத் தகர்த்தெறிந்து விட்டது. -