பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


4. தமிழர் ஆடை அணிகள்


திருமதி ஆர். இராஜாமணி,

மேரி அரசிக் கல்லூரி, சென்னை

ஒரு நாட்டினர் அணியும் ஆடையணிகள், அந்நாட்டு நாகரிகத்தின் சின்னமாக விளங்குகின்றன. பண்டைத் தமிழரது நாகரிகத்தை, அக்காலத்திலிருந்த புலவர்கள், என்றும் அழியாத சொல்லோவியமாகத் தீட்டியுள்ளனர். எனவே, அன்னாரது வாழ்க்கைக் கண்ணாடியாக விளங்கும் சங்க இலக்கியத்தின் துணை கொண்டு, அவர்கள் அணிந்திருந்த ஆடையணிகளைக் குறித்துச் சிறிது ஆராய்வோம்:

உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த மக்கள் நாகரிகமற்று வாழ்ந்த காலத்தில், பழந்தமிழர் சிறந்த ஆடையணிகளையணிந்து, சீரும் சிறப்பும் பெற்று விளங்கினர். அவ்வாடைகள், பெரும்பாலும் பருத்தி நூலால் ஆனவை. அவை, இழை தெரியாதவாறு மிகவும் நெருக்கமாகவும், மென்மையாகவும் நெய்யப்பட்டன. அவற்றிற் குவமையாக, பாலாவி, புகை, பாம்பின் சட்டை, மூங்கிலின் மெல்லியதோல் முதலியவற்றைப் புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இதினின்றும், நம் நாட்டில் நெசவுத்-