பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

வெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட பொற்றாமரைப் பூக்களையும், விறலியர் அணிகலனுக்கு வேண்டிய பொன்னையும் பரிசிலாகப்பெற்று வந்தனர்.

அணிகலன்கள், பெண்களது இயற்கையழகை மிகுதிப் படுத்துகின்றன என்பர் ஒரு சாரார். இயற்கையழகினால் அணிகலன்கட்குச் சிறப்பு ஏற்படுகிறது என்பவர் மற்றொரு சாரார். அணிகளின்றியே அழகு மிகுந்து தோன்றும் என்பர் இன்னொரு வகையினர்.

       ‘கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
       அடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்
       செய்யாக்கோல மொடு வந்தீர்

என்னும் சிலப்பதிகார அடிகளும்,

       'புனையா வோவியம் போல நிற்றலும்’

என்னும் மணிமேகலையடியும் இறுதிக் கூற்றை வலியுறுத்துகின்றன,

மக்கள் அணிகலன்கள் அணிந்திருந்தது மாத்திரமன்று: யானையின் நெற்றியில் ஒடை யென்னும் பொன் முகபடாத்தையும், அதன் மறுப்பில் 'கிம்புரி' என்னும் பூணையும் அணிவித்தனர். பாண்டிநாட்டைச் சேர்ந்த பிசிராந்தையார் என்னும் புலவர், அன்னச் சேவலை நோக்கி, “நீ குமரியினின்றும் வடக்கே செல்கையில் இடையிலுள்ள உறையூரில் தங்கி, கோப்பெருஞ்சோழனைக் கண்டு, நீ என்னுடைய அடியின்கண் உறைபவன் எனக்கூறுவாயேல், அவன், உன்னால் அன்பு செய்யப்படும் பேடைக்கு வேண்டிய அணிகலன்கள் அளிப்பான்” என்றார். பறவைகள், அணிகள் அணிவதில்லை. எனவே,காணாமலே நட்புக்கொண்டதன் ஆருயிர்