பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

வந்தனர் என்பதைப் பண்டை நூல்களால் அறிகின்றோம். பாண்டிய மன்னர் தம் கோநகரில் புலவரைக் கூட்டிச் சங்கம் அமைத்துத் தமிழை வழிவழிக் காத்து வளர்த்து வந்தனர் என்று வரலாறு கூறுகின்றது. நாகரிகத்தின் அடிப்படை கல்வியே என்று அறிஞர் கூறுவர். சங்க காலத்தில் அவ்வடிப்படை மிகச் சிறந்த நிலையில் அமைந்திருந்தது என்பதை மேற்காட்டிய உண்மைகள் நன்கு உணர்த்தும்.

தொழில்கள்

கல்வியில் தெளிவினால் தமிழர் உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய வாழ்வியல் நிலைகளில் தலை சிறந்து விளங்கினர். திருக்குறளிலுள்ள உழவு என்னும் அதிகாரம் பழந்தமிழர் பயிர்த்தொழில் அறிவை நன்கு தெரிவிக்கும். உழுதொழிலுக்கு அடுத்து உயர்ந்த தொழிலாகக் கருதப்பட்டது 'நெய்தல்' தொழிலேயாகும். பருத்தி, எலி மயிர், ஆட்டு மயிர் முதலியவற்றால் ஆடைகள் நெய்யப்பட்டன. ஆடைகளில் பூத்தொழில் செய்யும் வழக்கமும் இருந்து வந்தது. மிக நுட்பமான நெய்யப்பட்ட மெல்லிய ஆடைகள் பாம்பின் சட்டை போலவும் மூங்கிலிருந்து உரிக்கப்பட்ட மெல்லிய தோல் போலவும் புகையைப் போலவும், பால் நுரையைப் போலவும், தெளிந்த வெண்ணிறமுள்ள அருவிநீர் போலவும் இருந்தன என்று பண்டை நூல்கள் பகருகின்றன. கோசிகம் முதல் பணிப் பொத்தி ஈறாக முப்பத்தாறு வகைப்பட்ட ஆடைகள் சிலப்பதிகார உரையில் காட்டப்பட்டுள்ளன.

சங்க காலப் பெண்கள் அணிந்து வந்த அணிகள் பலவாகும். அவற்றைச் செய்து வந்த உருக்குத் தட்டாரும், பணித் தட்டாரும் பலராக இருந்தனர். அப்பொற்கொல்லர் மாணிக்கம், நீலம், வைரம்