பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வெல்வதற்கும் துன்பத்தினின்றும் உயிர்களைக் காத்தற்கும் அத்தெய்வங்களின் தொடர்பு சமய வாழ்வில் சிறந்து நின்றது. மக்களுயிர்களுள்ளும் அல்லன கடிந்து நல்லனவே புரிந்தவை மறுமையில் தெய்வங்களாயினவும் உண்டு. இவ்வாற்றால் தெய்வங்களைப் பற்றிப் பலவேறு வரலாறுகள் சமயத்துறையில் காணப்பட்டன. அவற்றை இந்நாளில் புராண வரலாறுகள் என்பன வழக்கம். மக்கள் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டெழுந்த பழந்தமிழ் இலக்கியங்களில் தெய்வங்கள் சார்பான புராண வரலாறுகள் பல உளவாயின.

குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனைப் பற்றிய வரலாறுகளில், அம்முருகன் தாமரைப் பூவில் பிறந்தான் என்பதை, 'நிவந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப் பயந்தோர் என்பது பதுமத்துப்பாயல்' என்று பரிபாடல் முதலிய நூல்கள் குறிக்கின்றன. கடலிடத்தே இருந்து குறும்பு செய்து உயிர்களை வருத்தித் திரிந்த சூரவன்மாவின் காவல் மரமான மாமரத்தைத் தடிந்து அவனையும் கொன்று முருகன் மேன்மையுற்றான் என்பதை,

"நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை பவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள்”

என்று பதிற்றுப்பத்தும்,

"அவுணர் நல்வலய் அடங்கக் கவிழினர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசைச் செல்வேற் செய்”