பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

என்று முருகாற்றுப் படையும் பிறவும் குறிக்கின்றன. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகையமர்ந்த” முருகனைச் சிறப்பிக்கும் சான்றோர், வள்ளியை, “முருகுவுணர்ந்தியன்ற வள்ளி” என்றும், அவளுடைய பெற்றோரை, “குறிஞ்சிக் குன்றவர் மறற்கெழு வள்ளி தமர்" என்றும் எடுத்துரைக்கின்றனர்.

முல்லை நிலத்தெய்வமான மாயோன், கண்ணால் முல்லை நிலத்து ஆயரிடையே யமுனைக் கரையில் விளையாடிய வரலாறு,

"வடா அது,
வண்புனல் தொழுை ந வார்மன லகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல்"

என்றும், கஞ்சன் விடிப்புக் குதிரை வடிவில் வந்த அசுரனை வென்ற செய்தியை,

"கயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் புகுத்திட்டுப் புடை த்த ஞான்றுஇன்னன்கொல்
மாயோன் என்றுஉட்கிற்றுஎன்நெஞ்சு"

என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. இவ்வாறே மருதத்துக்குரிய தெய்வமான இந்திரன், முருகன் முதலிய தெய்வங்கட்குப் படையுதவிய பண்பும், அகலிகை பொருட்டு மேனி முழுதும் கண் பெற்ற கதையும் பழந்தமிழரிடையே நிலவின. பாலைக்குரிய தெய்வமான கொற்றவையை முருகனுக்குத் தாய் என்றும், அவளே எல்லாத் தெய்வங்கட்கும் பழையவள் என்றும்