பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

"நெடும் பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்தே ஆறமர் செல்வ,
ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை
மலைகள் மகனே, மாற்றோர் கூற்றே,
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ,
இழையணி சிறப்பின் பழையோள் குழவி,
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றம் கென்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர் புகழ் நன்மொழிப் புலவ ரேறே

அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்தும இசைபே ராள
அலந்தோர்க் களிக்கும் பொலமபூண் சேய்
மண்டமர் கடந்தநின் வென்னாட டகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசில்"

எனச் சொல்லி முடிவில்,