பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79



7. தமிழர் மருத்துவக்கலை

பண்டித எஸ். எஸ். ஆனந்தம்
அரசாங்க இந்திய மருத்துவ மத்திய சபை உறுப்பினர்

உலகில் மக்கள் இனம் என்று தோன்றியதோ அன்றே மக்களுடன் பிணி, மூப்பு, சாக்காடுகளும் எதிர்பாரா இன்னல்களும் தோன்றிவிட்டன. அதற்குப் பரிகாரங்களை அனுபவத்தில் கண்ட நம் முன்னோர்கள் அவைகளைப் பரம்பரையாய்க் கையாண்டு வந்தனர். மக்கள் பேசிய ஒலிவடிவமாகிய மொழிக்கு வரிவடிவமாய் எழுத்து ஏற்பட்ட பின்னர் அவர்கள் கண்ட உண்மைகளையும் அறிவு அனுபவங்களையும் அவர்களின் பின் சந்ததியாகிய நமக்கு நூல்களாக்கி வைத்தனர். அந்நூல்களில் மருத்துவக் கலையை முதன்மையானதெனக் கூறலாம்.

மக்கள் நோயின்றி உடல் உரத்துடன் நெடுநாள் நலமாய் வாழ்ந்து வீடுபேற்றை அடைவதற்கான வழிகளைக் கூறுவதே மருத்துவக் கலையாகும்.