பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


மூவாசையில் மூழ்கி முக்குணவயப்பட்ட ஆறறிவுள்ள மக்களுக்கு நோய்கள் மிகுதியாய் வருகின்றன. நோய்கள் உடம்பைப் பற்றியும், உள்ளத்தைப் பற்றியும் வருவதென இருவகைப்படும். வயது, செய்தொழில், வாழும் நிலத்தியல்பு, பருவகாலங்களுக்கேற்ப, உணவு உடை தொழில் முதலியவற்றைச் சரிப்படுத்திக் கொள்ளாததால் வரும் உடற்பிணியையும், அவா மிகுதியால் வரும் கவலை, அச்சம், சினம் முதலியவைகளால் ஏற்படும் உள்ளப்பிணிகளையும் வராமல் தடுப்பதும் வந்த நோய்களைப் போக்குவதும் மருந்தாகும்.

மருந்து பற்றித் திருமூலர்,

"மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனல் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவே மருந்தென லாமே”

என்று குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்,

"உற்றவன், தீர்ப்பான், மருந்துஉழைச் செல்வானென்
றப்பால்நாற் கூற்றே மருந்து"

என்பதால் மருந்தென்பது ஒரு தனிப் பொருளன்று என்பது வெளியாகிறது.

பிணியாளி, பிணியைத் தீர்க்க முன்வந்த மருத்துவன், அவன் கையாளும் மருந்து, மருத்துவன் சொன்னபடி நோயாளிக்கு மருந்து உணவு முதலியவை கொடுத்து அருகிலிருந்து துணையுரியும் (நர்சு) துணையாள் இந்த நான்கில், பிணியாளிக்கு நான்கு குணம், மருத்துவனுக்கு நான்கு குணம், அவன் கொடுக்கும் மருந்துக்கு நான்கு குணம், துணையாளுக்கு