பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

முழங்காலில் நின்று இரண்டு கைகளையும் கீழே ஊன்றிக் குனிந்து நிலத்தில் நெற்றி படும்படியாகத் தலையைக் கீழே வைத்தும், பின்னர்த் தலை நிமிர்ந்து முழங்காலில் நின்று கைகளைத் தலைக்குமேல் தூக்கி இரண்டு கைகளையும் கூப்பித் தொழுதும், பின்னர்த் தலை குனிந்து நெற்றி நிலத்தில் படும்படி தலை வணங்கியும் இப்படிப் பல தடவை செய்து வழிபடுவார்கள். அப்படி வணங்குங்காலத்தில் தலை குனியும்போது மூச்சை மெல்ல இழுத்து உள்ளே நிறுத்தியும், குனிந்து தலையைக் கீழே வைக்கும்போது உள்ளே நிறுத்திய மூச்சை மெல்ல வெளியே விட்டும் வழிபடுவார்கள். இதனால் அவர்கட்கு உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி இரண்டும் நடைபெறுவதோடு மந்திரத்துக்குரிய மனப்பயிற்சியும் நடைபெறுகிறது. மந்திரத்தைப் பற்றிப்பின்னர்க் கூறுவோம்.

மணியாகிய ஞாயிறு வழிபாடு சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்வரை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள்.

இன்று நாம் மருத்துவக் கலையைச் சேர்ந்த நல்லொழுக்க மாகிய அப்பழக்கங்களை அநாகரிக மூடப்பழக்கமெனப் புறக்கணித்துக் கைவிட்டுவிட்டோம். நம் முன்னோர்கள் பலர் நோயின்றி நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்து சாகுங் காலத்திலும் நோய்வாய்ப்படாமல், “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவிழந்து ஐமேலுந்தி அலமந்த" உயிர் போகாமல் நல்லறிவோடு தூங்குவதுபோல் உடலையும் இம்மண்ணையும் விட்டு விண்ணிற் கலந்தார்கள்.

நமது நாட்டில் நம்முடன் பிறந்து நம்முடன் வாழும் முகம்மதியரெனும்'இஸ்லாமான சகோதரர்கள்' இப்பழக்கங்களில்