பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வாசிவா வென்று வாசியில் ஊடாடி
வாசியை உள்ளே வைத்துநீ பூசித்தால்
வாசியும் ஈசனும் மருவி ஒன்றாகும்
வாசியைப்போல் சித்தி மற்றேது மில்லையே
மனமடங்க வாசி அடங்கும்
வாசி அடங்க மனமடங்கும்.

மந்திர சக்தியே மனோசக்தி, மனோசக்தியே ஜீவசக்தி ஜீவசக்தியே தேச சக்தி.

முவகைக் குற்றம்

திரிதோஷம் என்னும் வாத, பித்த, சிலேத்துமம் என்னும் (கபம்) இம் முப்பொருள்களின் ஏற்றக் குறைவால் வருவதே நோய் என்பது தமிழ் மருத்துவக் கலையின் அடிப்படை. இதைச் சிறிது விளக்குவோம்.

அண்டத்திலுள்ள பஞ்சபூதமெனும் ஐம்பெரும் பொருள்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் என்பவற்றுள் நமது உடம்பில் உயிராயிருந்து உடம்பை இயக்கிச் செயற்படுத்துவது வளி, தீ, நீர் எனும் முப்பொருள்களேயாகும். ஐம்பெரும் பொருள்களில் தம்நிலையில் மாறுபாடாதன மண்ணும் விண்ணும். நடுவிலுள் முப்பொருள்கள் தம் நிலையில் அடிக்கடி மாறும். இவைகள் அண்டததில் வியாபித்துள்ளதே போய் பிண்டமாகிய நமது உடம்பிலும் வியாபித்துள்ளன.

வளி, தீ, நீர் இவையே வாத, பித்த, சிலேத்துமமென மருத்துவ நூல்களில் கூறப்படுகின்றன. இம் முப்பொருள்கள் உயிருள்ள பிராணிகளை எல்லாம் செயற்படுத்துவதோடல்லாமல்