பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



அதேபோல் அறிஞர் தடுத்தும் உடன் கட்டையேறத் துணிந்த பூதப்பாண்டியன் மனைவியின் செயலும் இதனை வலியுறுத்தும். அலுத்து வந்த ஆருயிர்க் கணவனுக்கு அறுசுவை உணவளித்து மகிழ்வது மனைவியின் முதற் கடமையாகும்.

“நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டு”
"குட்குரல் மலிந்த கொழுந்துவை யடிசில்”
"ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி"
"மோட்டிரு வரா அல் கொட்டுமீன் கொழுங்குறை”

போன்ற அடிகள் அவர்களது அட்டில் தொழில் வன்மையைக் காட்டும். தாம் சமைத்ததை, "இனிது இனிது” எனக் கணவர் சுவைத்துண்பதைக் கண்டு அம்மகளிர் மட்டிலா மகிழ்ச்சியடைவர் என்பதை,

"தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
"இனிதெனக் கணவன் உண்டலின்
"நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்னுதல் முகனே”

குறு. 167


என்ற குறுந்தொகையடிகள் எடுத்துக் காட்டும் இத்தகைய உண்மையன்யினாலே, வன்மைமிக்க ஆடவரையும் மென்மை மிக்க மகளிர் பிணித்து விட்டனர்.

“மென்மை மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை”

புறம்.68

என்று சோழன் நலங்கிள்ளியைப்பற்றிப் புறநானூற்றில் கோவூர் கிழார் கூறுவர்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு”

குறள் 1088